தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல விமான நிலைய பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென மின்னஞ்சல் மூலம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.