மதுரை ஆனையூர் பார்க்டவுன் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி சர்மிளா தேவி. இவருக்கு வயது 29. சர்மிளாதேவி கடந்த ஒரு வருடமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வயிறு வீக்கம் மற்றும் கடுமையான வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நலன் பிரிவில் உள்நோயளியாக அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே மற்றும் ஸ்கேஸ் பரிசோதனையில் சுமார் 6 மாதங்களாக அவருக்கு 30×30 cm அளவுள்ள சினைப்பைக்கட்டி இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டு,சுமார் 7 கிலோ அளவுடைய சினைப்பைக்கட்டி அறுவை சிகிச்சை மூலம் ,மிகுந்த சிரத்தையுடன் மருத்துவத்துறையினர் அகற்றியுள்ளனர். இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் சுமதி தலைமையிலான மருத்துவர்களுக்கும், மயக்க மருத்துவத்துறைத் தலைவர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவால் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. திசு பரிசோதனையில் சாதாரண கட்டி(benign )என்று கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது நோயாளி பரிபூரண உடல் நலமுடன் உள்ளதாகவும், சிகிச்சையளித்த மருத்துவ குழுவிற்கு, மருத்துவக்கல்லூரி முதல்வர் இரத்தினவேல்பாராட்டு தெரிவித்தார்.













