விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணாபுரம் ஊராட்சி தாட்கோ காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ தங்கப்பாண்டியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது முதல் மாத சட்டமன்ற உறுப்பினர் ஊதியத்தொகையில் இருந்து, 20 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேசும்போது, ‘இந்தப்பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், சுய தொழில்கள் தொடங்கவும், வங்கி கடன் வசதி பெறவும், உதவித்தொகை பெற விரும்புபவர்கள், எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்து நேரடியாக என்னை சந்திக்கலாம்’ என்றார்.














