அகழ்வாய்வு அறிக்கையை விரைவில் வெளியிடுக: ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அமைச்சர்

0
617



சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசியபோது, ’தொல்லியல் துறை அகழாய்வில் தமிழ்நாடு 2600 ஆண்டுகள் பழமையான நாகரிகம் கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது. கீழடி அகழ்வாய்வில் முதல் முறையாக முழுமையான குறுவாள் கிடைத்துள்ளது. உலகளவில் பேசப்படும் அளவில் கீழடி அருங்காட்சியம் விரைவில் அமையும்தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வு அறிக்கையினை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here