தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த பொண்ணு என்பவரின் மகன் கண்ணன் (52). தங்க நகை வேலை மற்றும் வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்து இருந்தார்.அப்போது மது அருந்திய அவர் கொண்டு வந்திருந்த 20 கிராம் தங்க வளையல், 30 கிராம் தங்க கட்டி, மற்றும் 9 ஆயிரத்து 500 பணத்தை பையில் வைத்து காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் படுத்து தூங்கினார்.
பின்னர் போதை தெளிந்து எழுந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த தங்க வளையல் ,தங்க கட்டி மற்றும் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணன் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.