முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாநில பொது செயலாளர் வானுமாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களும் எழுப்பினர். பின்னர் அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.