போரூரை அடுத்த சமயபுரத்தில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்த கொள்ளையன் மதில் சுவரேறி குதித்து வீடுகளில் கைவரிசை காட்டி வருவது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. முகத்தை மூடியபடி, கை மற்றும் கால்களில் உறைகள் அணிந்து தடயம் ஏதும் பதியாமல் இருக்கும் வகையில் இரவு நேரங்களில் நடமாடும் அந்த கொள்ளையனை கண்டு அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சில நாட்களாகவே நடமாடும் அந்த கொள்ளையனை பிடிக்க போலீசார் வலை விரிப்பார்களா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.