திருமங்கலம் தொகுதியில் உள்ள புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கொரோனாவை ஒழிகக 6 ஆம்ச திட்டத்தை கூறினார்.
நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முழுமையான விழிப்புணர்வை கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும்
கிராமப்புறங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும்.
தேவையான இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனைத்து பகுதிகளில் தடுப்பூசி முகாமை விரைவுபடுத்த வேண்டும். அதிக அளவில் தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்று அனைத்து மாவட்ட ,தொகுதி, பகுதிகளில் பாரபட்சமின்றி வினியோகம் செய்யவேண்டும்
ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களின் ஆக்சிஜன் அளவு மற்றும் உடல் வெப்பநிலையை மருத்துவ உபகரணங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
தொற்று உள்ளவர்களுக்கும் உறவினர்களுக்கும் உளவியல் ஆலோசனைகளை வழங்கிட வேண்டும்.
அதேபோல் நோய் தொற்றார்களுக்கும், பணியாளர்களுக்கும் உயிரை பணயம் வைத்து முன்களபணி செய்துவருபவர்களுக்கும் தரமான உணவு வசதிகளை போதுமான அளவில் சரியான நேரத்தில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்.














