முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐ.சி.சி. வாக்கு அகாடமியினர் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து ஐ.சி.சி. விருது பட்டியலுக்கு தலா ஒரு வீரர், வீராங்கனையை தேர்வு செய்வார்கள்.
ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டனும், ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியதால் இந்த விருது கிடைத்துள்ளது.
சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 155 ரன்கள் சேர்த்திருந்தார்.













