60 அடிகிணற்றில் விழுந்த 3வயது மானை மீட்ட 6 தீயணைப்பு வீரர்கள்

0
484

ராணிப்பேட்டை மாவட்டம்
சோளிங்கர் அடுத்த கம்பபாளையம் கிராமத்தில் விவசாய கிணறு ஒன்றில் 3வயது கொண்ட ஆண் புள்ளிமான் ஒன்று விழுந்து கிணற்றில் உள்ள மரக்கிளையில் மாட்டிக்
கொண்டுள்ளதாக மாவட்ட
வனச்சரகத்திற்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை வனத்துறையினர் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் ஆறு பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று ஒருமணிநேரம் போராடி மானை உயிருடன்‌ மீட்டனர்.

பின்னர் மானை ஜம்புகுளம் காப்புக் காட்டில் விட்டனர்.3 வயது
புள்ளிமானை உயிருடன்‌ மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள் .மீட்பு வீடியோ கீழே :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here