வட மாநிலங்களில் கடும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் 24 பேர் உயிரிழந்தனர். சிம்லாவில் 8 நாட்களுக்கு இடியுடன் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர்காண்ட் மாநிலம் உத்தரகாசியில் யமுனை ஆற்றில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 20பேருக்கு மேல் காணவில்லை என அரசு அறிவித்துள்ளது.















