‘
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தேவிநகரில் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான புதிய அலுவலக மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தை தருமையாதீனம் மாசிலாமணி மற்றும் மதுரை ஆதீனம் தேசிக பரமாச்சாரியார் இருவரும் திறந்து வைத்தனர்் .
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த தருமை ஆதீனத்திடம் அன்னபூரணி போன்ற திடீர் சமாரியார் உருவாவது குறித்து கேட்டதற்கு, ‘
பாரம்பரியமிக்க ஆதீனங்கள் பதினெட்டு உள்ளன., இதன்கீழ் கோயில்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன . இதனை நீதிமன்றங்களும்் அங்கீகரித்துள்ளன.இது போலிகளுக்கும், பழனிக்கும், மக்களுக்கும் தெரியும் அவரைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை எனக் கூறிச் சென்றார்.
_
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனத்திடம்,
தற்போது, மீட்டெடுக்கப்பட்ட மரகத லிங்கம் போன்ற புராதான சின்னங்களை மீட்டெடுக்க கோரிக்கை வைத்துள்ளீர்களா என்று செய்தியாளர் கேட்டதற்கு, ‘வாயைப் பிடுங்குகிறீர்களா.? ” எனக்கேட்டு, பிடித்த சிலையை ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாகவும்., பிடித்ததை முதலில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, அன்னபூர்ணி போன்ற திடீர் சாமியார்கள் உருவாவது குறித்து கேள்வி கேட்டவுடன் அந்த கேள்வியை கேட்டு என்னை மாட்டி விட்டு விடாதீர்கள்.? இது ஏற்கனவே, தனியார் தொலைக்காட்சி ஒன்று என் வாயை பிடுங்கியது. 2500 ஆண்டு பழமை வாய்ந்தது மதுரை ஆதீனம் என கூறிய அவர் அதெல்லாம் மாயை எனக் கூறினார்.