சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கைதியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவரது பிறந்த நாள்.
காலை முதல் அவர் சிறையில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். உணவு மட்டும் அருந்தியுள்ளார். நேற்று விடுமுறை தினம் என்பதால் பெண் கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. எனவே, அவரை பார்க்கவும் யாரும் வரவில்லை.
சிறைக்கு வந்த பின்னர் தனது பிறந்த நாளில் மவுன விரதத்தையே கடைப்பிடித்து வருவதாக சிறைத்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.














