சிறு சேமிப்பு பணத்தில் தூய்மை பணியாளருக்கு உணவு வழங்கிய மாணவன்

0
420

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை  அடுத்த   வாழைப்பந்தல் கிராமத்தில் நம்மாழ்வார் இயற்கை குழுவில் பயணிக்கும், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வசந்தகுமார் (15 ) தான் சேமித்து வைத்திருந்த ₹1375 ஐ செலவழித்து அப்பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கினார்.

பின்னர் வேலையின்றி வறுமையில் வாழ்ந்து வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்  குடும்பத்திற்கு அரிசி மளிகை மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பினை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில்  புவனேஸ்வரி முன்னிலையில்  வழங்கப்பட்டது. உடன், கிராம உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here