திருமங்கலம் அருகே சிறுமியிடம் ஆபாசமாக பேசியவர் மீது போக்சோ வழக்கு பதிவு

0
540

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த குராயூர் பகுதியில் கணவனை இழந்த பெண் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் பத்தாம் வகுப்பு பயிலும் சிறுமி. தாயார் வெளியே சென்ற நிலையில் சிறுமி டீக்கடையில் வியாபாரம் செய்துள்ளார்.

அப்பொழுது, குராயூர் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் முருகன், மதுபோதையில், தனியாக இருந்த சிறுமியிடம் ஆபாச வார்த்தைகளில் பேசி தொந்தரவு செய்துள்ளார். இச் சம்பவம் குறித்து, சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த தாயார், அருகில் உள்ள திருமங்கலம்அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் தனது மகளுடன் நேரில் வந்து புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மாணவியிடம் ஆபாச வார்த்தை பேசிய முருகன் மீதுபோக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவான முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here