சுகாதார வளாகம் அருகிலேயே சுகாதாரக்கேடு

0
373

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில் பெண்கள் சுகாதார வளாகம் உள்ள மெயின் ரோட்டில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால், குப்பைகள் தேங்கி ஒரு வித துர்நாற்றம் வீசுவதாகவும் ,இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாகவும் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தேனூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும், ஊராட்சி மன்ற தலைவரோ, செயலாளரோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்கின்றனர்.


ஊராட்சி மன்றம் சார்பாக, தினசரி வீடுகளுக்கு குப்பை வாங்க வருபவர்கள் வராத காரணத்தால் இந்த பகுதி பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில் குப்பைகளை கொட்டுவதால் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
ஆகவே, மதுரை மாவட்ட ஊராட்சி நிர்வாகம், குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனைகள் வழங்க, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here