செங்கம் அருகே பள்ளத்தில் கார் பாய்ந்து மூவர் படுகாயம்

0
433

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பிரதான சாலையில் திருச்சியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அதிவிரைவாக சென்ற கார் சாலையிலிருந்த மேம்பாலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த காரில் பயணித்த மூன்று இளைஞர்களில் ஒருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மீதமுள்ள இருவரும் பலத்த காயங்களுடன் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here