கோவை சித்ரா அடுத்த டெக்ஸ் பார்க் பகுதியை சேர்ந்தவர் செங்குட்டுவன்.இவரது மகள் சிந்துஜா (33)
நவ இந்தியா பகுதியில் சாக்லேட் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு சென்று முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கம்,அவரது மருமகன் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட புகாரை கொடுத்திருந்தார்.மேலும் கோவை அணைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார்.
புகாரில் சிந்துஜாவிற்கு 2014ம் ஆண்டு தொழிலதிபருடன் திருமணமாகி பின்னர் விவகாரத்து ஆனது. அதனையடுத்து சிந்துஜாவின் முன்னாள் கணவரின் பி.எஸ்.ஜி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் சிந்துஜாவை சந்தித்து பிசினஸ் பார்ட்னராக இணைந்தார்.பின்னர் சிந்துஜாவுடன் நெருக்கமாக பழகி திருமணம் செய்துகொள்வதாக கூறி தனியாக வசித்து வந்தார்.
இருவரும் கணவன் மனைவி போல நெருக்கமாக திருமணம் செய்யாமல் வசித்து வந்தனர். அதன் காரணமாக அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. சிந்துஜா ,அருண் பிரகாசுடன் பழகிய 7 ஆண்டுகளில் சுமார் ரூ. 7 கோடி வரை அவருக்காக கொடுத்துள்ளார்.மேலும் லோன் வாங்கி மூன்று கார்களை வாங்கியும் கொடுத்துள்ளார். இந்நிலையில் சிந்துஜாவை அருணபிரகாஷ்
திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்.மேலும் சிந்துஜா தான் கொடுத்த 7 கோடி ரூபாயில் 2 கோடி ரூபாயை திருப்பி கேட்டுள்ளார்.இந்த பண்ணத்தி அருண் பிரகாஷ் திருப்பி கொடுக்க மறுத்தார்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது.
தகராறு முற்றிய நிலையில் அருண் பிரகாஷ் தனது நண்பர்கள் விக்னேஷ், லிஜினேஷ் ஆகியோருடன் கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு சிந்துஜாவின் வீட்டிக்கு சென்றுள்ளார்.அங்கு சிந்துஜா மற்றும் அவரது பெற்றோரை அருண் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் அடித்து உதைத்ததோடு சிந்துஜாவின் ஆடைகளை கிழித்தனர்.பின்னர் அருணபிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சிந்துஜாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தது அங்கிருந்து தப்பி சென்றனர்.

தொடர்ந்து சிந்துஜா இது குறித்து கோவை அணைத்து மகளிர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.மேலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் சென்னை சென்று போலீஸ் டி ஜி பியிடம் நேரில் புகார் அளித்தார்.சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளையும் அவர் அளித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிந்துஜா அருண்பிரகாஷ் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால் தனக்கு சந்தேகமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கத்தின் மருமகன் எனக்கூறி மிரட்டி வெளியே சொன்னால் தனது ஆபாச படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருவதாகவும் அருண் பிரகாஷ் மிரட்டினார். மேலும் கோவை தங்கம், அவரது மகள், அருண் பிரகாஷ் ஆகியோர் அடியாட்களுடன் வந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் தாக்கிவிட்டு கூறினார்.
இது குறித்து புலியகுளம் காவல் நிலையத்தில் தான் புகார் அளித்த போது அருண் பிரகாஷை வரவழைத்து விசாரணை நடத்திய போது தான் செய்ததை ஒப்புகொண்டு தனக்கு 1.5 கோடி ரூபாயை 1வருடத்தில் தருகிறேன் என ஒப்புகொண்டார்.
இதனையடுத்து அடுத்த நாளே கோவை தங்கம் தனது அடியாட்டுகளுடன் வழக்கை வாபஸ் வாங்குமாறு தன்னை மீண்டும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி சென்றனர்.இதனால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய கோவை தங்கம், அருன் பிரகாஷ், உட்பட 5 நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்ககோரி புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.
புகாரின் பேரில் போலீசார் அருண் பிரகாஷ் ,விக்னேஷ் ,லிஜினேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












