கோவையில் இன்று காலை கஞ்சா விற்பனை கும்பல் இரண்டு வாலிபர்களை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர் . இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நகரில் கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை கும்பல் அதிகரித்து உள்ளது. இதில் தொழில் போட்டி காரணமாக ஒருவருக்கொருவர் அடிதடி போட்டு கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.இந்த கஞ்சா விற்கும் கும்பல் இளைஞர்கள் இளம்பெண்களை இந்த தொழிலில் வியாபாரிகள் ஆக மாற்றி சமூக சீரழிவு உண்டாக்குகின்றனர். கடந்த மாதத்தில் கூட காளபட்டி பகுதியில் புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவரும கல்லூரி மாணவர் ஒருவரும கஞ்சா விற்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டனர்.

இந்நிலையில் இன்று கோவை வெள்ளக்கிணறு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கஞ்சா வியாபாரிகள் இரண்டு வாலிபர்களை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினர்.இந்த கத்தி குத்தில் காயமடைந்த இரண்டு வாலிபர்களையும் அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.