நெல்லை ராமையன்பட்டியில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கால்நடைகளுக்கான உயர் சிகிச்சை வசதியும் உள்ளது. இன்று காலை இரண்டு மர்ம நபர்கள் மினி லாரியில் எருமை மாடு ஒன்று தாடைகள் உடைந்த நிலையில் ரத்த காயங்களுடன் இந்த கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் கொண்டு வந்துவிட்டுவிட்டு சென்றுவிட்டனர்..தாங்கள் யார் , எங்கிருந்து வந்தார்கள் என்ற விபரம் கூறாமல் சென்றுவிட்டனர் .
மாடு வலியில் துடித்து அங்கும் இங்கும் ஓடியதைப்பார்த்த மருத்துவமனை பணியாளர்கள் அவற்றை பிடித்தனர். மருத்துவர்கள் அதற்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர் . மாடு வெடி பொருளை தின்றால் மட்டுமே இதுபோன்று தாடை உடைந்து காயம் ஏற்படும் என சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
எனவே,வந்தவர்கள் எதுவும் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் வைத்துள்ளவர்களா, அவர்கள் வைத்திருந்த வெடி பொருட்களை தின்றதில் இதுபோன்று ஆகியதால் அச்சத்தில் கால்நடை மருத்துவக்கல்லூரியில் விட்டு சென்றார்களா என மானூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .