குவைத்திலிருந்து சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தை ஆராய்ந்தபோது அதன் கழிவறையில் தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது. 5.6 கிலோ எடையுள்ள அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கத்தை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள், அதை கடத்திவந்தது யார் என்ற விசாரணையில் இறங்கியுள்ளனர்.













