லாரியில் ‘பல்க்’ஆக கடத்தி இடையில் ‘ரீடெய்ல்’ மது விற்பனை செய்த டிரைவர் கைது

0
394

கோவை சூலூர் அருகே உள்ள முத்துகவுண்டன்புதூர் பகுதியில் சட்டவிரோதமாக  மது விற்பனை நடைபெறுவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது  தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்,

அப்பொழுது முத்துகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் அருகில் கூட்டமாக இருப்பதை கண்டு காவல்துறை அங்கு சென்றுள்ளனர்.அப்போது கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து லாரி ஓட்டுனரிடம் விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் அதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுநரை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் தென்காசி பகுதியை சேர்ந்த காந்தி (34) என்பதும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈச்சர் வாகனம் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்து சூலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் முன்னதாக வரும் வழியில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து லாரி ஓட்டுநர் காந்தி மீது வழக்குப்பதிவு செய்த சூலூர் காவல்துறையினர் அவரிடம் இருந்த இரண்டு லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக மது வகை பாட்டில்கள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர் பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் கர்நாடக மாநிலத்தில்  யாரிடமிருந்து மதுபாட்டில்கள் பெறப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here