பருப்பு டெண்டருக்கு விதித்த தடை நீக்கம்

0
1382

தமிழ்நாடு நுகர்பொருள் விநியோக கழகம் ஏப்ரல் மாதம் பருப்பு, எண்ணெய் கொள்முதலுக்கு டெண்டர் விட்டது. பழைய விதியை ரத்து செய்து புதிய விதிமுறைப்படி கொள்முதலுக்கு டெண்டர் விட்டதால் 4 நிறுவனங்கள் டெண்டரை தடை செய்ய மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், டெண்டருக்கு தடை விதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது 4 நிறுவனங்களும் தங்கள் மனுவை திருப்பப் பெற்றதால் வழக்கை தள்ளுபடி செய்து அமர்வு உத்தரவிட்டது, மேலும், டெண்டர் விடுவதற்கான தடையையும் நீக்கி உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here