கோவை பல்கலையில் நேபாள மாணவர் தற்கொலை

0
1212

நேபாள நாட்டை சேர்ந்த சந்தோஷ் நியூபன்( 26) கோவை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று இரவு சந்தோஷ் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்றார்.நள்ளிரவு அவரது அறையில் மின்விளக்கு எரிந்து கொண்டு இருந்ததை பார்த்த பக்கத்து அறையை சேர்ந்த மாணவர், சந்தோஷ் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அவர் ஜன்னலில் துண்டை கட்டி தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சந்தோஷ் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் சந்தோஷ் நேபாள நாட்டு பெண்ணை காதலித்து வந்ததும் இவர் கோவைக்கு படிக்க வந்ததால், காதலியை வேறு ஒருவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து கொடுத்து விட்டதால் மன வருத்தம் அடைந்த சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here