நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகள் சுஷ்மிதா (7). இவர்கள் இருவரும் நேற்றிரவு நாகர்கோவிலில் இருந்து வடக்கன்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். காவல்கிணறு அரசு பள்ளி அருகே வந்தபோது எதிர் பாராத விதமாக முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது அவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதி டிப்பர் லாரியில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் சகாயராஜ் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அப்பகுதியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு நாகர் கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி சுஷ்மிதா பரிதாபமாக இறந்தாள். சகாயராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.








