தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு கொடுக்கும் ஃபோட்டோகிராபர்

0
1169

தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரத்தை ஏற்படுத்தியும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பெரும்பாலானோர் முன் வருவதில்லை. எனவே, அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குன்னத்தூர கிராமத்தை சேர்ந்த போட்டோகிராபர் தம்பிதுரை.

’எங்கள் ஊரில் இரண்டு நாட்கள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றும் யாரும் தடுப்பூசி போட முன்வரவில்லை. எனவே, நானும் என் வீட்டாரும் முதலில் தடுப்பூசி போட்டோம். அப்படியும் பலர் முன்வராததால் தடுப்பூசி போட வரும் அனைவருக்கும் தண்ணீர் பிடிக்கும்  குடம், எவர்சில்வர் தட்டு, சொம்பு, கிண்ணம் என விதவிதமாக அன்புப் பரிசு வழங்கி தடுப்பூசி போட ஊக்குவித்தேன்’ என்கிறார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here