தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அடிக்கடி குற்றங்கள் நடக்கும் இடங்களை கண்டறிய மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 350 இடங்கள் அதிக குற்றங்கள் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தகவலை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று வெளியிட்டுள்ளார். அந்தப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்









