‘சொல் ஒன்று, செயல் ஒன்று’ என்பார்கள். தற்போதைய அரசு அறிவுக்கும் பல திட்டங்கள் இவ்வாறு ஏட்டை கடந்து, எழுத்தை கடந்து செயல்பாட்டுக்கு வராமல் போகின்றன.
கடந்த 25ஆம் தேதி முதல் ஊரடங்கு புதுப்பிக்கப்பட் டபோது,மேலும் ஏழு நாட்களுக்கு நீடிக்கப்படும் ஊரடங்கு இடையே 31 ஆம் தேதி உள்ளூர் மளிகை கடை காரர்கள் பலசரக்கு ,காய்கறி பொருட்களை வாகனங்கள் ,தள்ளுவண்டிகளில் வாடிக்கையாளர்களுக்கு ‘டோர் டெலிவரி ‘செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதை நம்பி பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி பகுதியில் கடை வைத்திருக்கும் ஜெபராஜ் என்பவர் தனது வாடிக்கையாளர்களுடைய ஆர்டருக்கு ஏற்ப
மளிகை காய்கறி பொருட்களை கொள்முதல் செய்து வினியோகிக்க தயாரானார். அப்போது அங்கு வந்த பெருமாள்புரம் சப் இன்ஸ்பெக்டர் எதையும் டெலிவரி செய்யக் கூடாது என்று தடுத்து நிறுத்தியதோடு, எச்சரித்து விட்டு சென்றார்.
இதனால் வேதனை அடைந்த கடைக் காரர் பிடி ஒவை தொடர்பு கொண்டார் . ஆனால் அவரும் அறிவிப்பு வந்தது அதை செயல்படுத்த சொல்லவில்லை என்று மழுப்பினார். போலீசார் அனுமதித்தால் டெலிவரி செய்யுங்கள் என்று காவல்துறைக்கு .அதிகாரத்தை தானம் செய்தார்.
இதனால் வருத்தம் அடைந்த ஜெபராஜ் ,சுமார் 50,000 ரூபாய் பெறுமான காய்கறி பொருட்களை தனது கடை முன்பு பரப்பி ,யார் வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துச் செல்லுங்கள் என்று அறிவித்தார்.
இதைடுத்து சிறிது செய்து சில நிமிடங்களில் அப்பகுதி மக்கள் காய்கறிகளை அள்ளிச் சென்றனர்
தனது வியாபாரத்தைப் பற்றி கூட பரவாயில்லை இழப்பை கூட நான் பொருட்படுத்தவில்லை ஆனால் வாடிக்கையாளர்கள் கஷ்டத்தைப் போக்குவதற்காக முன்கூட்டியே ஆர்டர் செய்து சிரமப்பட்டு பேக்கிங் செய்து எனது ஊழியர்கள் மூலம் நியாயமான விலையில் வினியோகிக்கப் புறப்பட்டபோது இவ்வாறு காவல்துறையினர் தடுத்ததும் அனுமதி அளிக்க வேண்டிய ஒன்றிய ஆணையர் எதுவும் தெரியாது என்று கைவிரித்து வருத்தத்தை விளைவிக்கிறது நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் அரசு அறிக்கைக்கும் செயல்பாட்டுக்கும் இடையே உள்ள குளறுபடியை போக்கவேண்டும் இல்லாவிட்டால் மக்களுக்கு தேவையான பொருட்களை அரசாலும் வழங்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார் தனது சூழலை நேரடி லைவ் வெளியிட்டார்









