பாலிஷ் போடக் கொடுத்த தங்க நகைகளுடன் வட இந்தியர் தலைமறைவு

0
964


ஆர்எஸ் புரம் லோகமானிய அதிரையை சேர்ந்த சதீஷ்குமரன் அதே பகுதியில் நகை பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது பட்டறையில் செய்யும் நகைகளை தியாகி குமரன் வீதியிலுள்ள சொருப் கோஸ் என்பவரது நிறுவனத்தில் கொடுத்து பாலிஷ் போடுவது வழக்கம் .இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷ் குமரன் 358 கிராம் தங்க நகைகளை பாலிஷ் போடுவதற்காக சொருப் கோஸ் இடம் கொடுத்திருந்தார். மறுநாள் பாலீஸ் போடும் நிறுவனத்திற்கு சென்று பார்த்த பொழுது அந்த நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது .தொடர்ந்து சதீஷ் குமரன், சொருப் கோஸ் செல்போனுக்கு தொடர்பு கொண்டார் .செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தார் .அப்போது அவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு கடையை பூட்டி விட்டு சொருப் கோஸ்
சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சதிஷ் குமரன் வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here