கோவை காந்தி பார்க்கில் இருந்து சொக்கம்புதூர் செல்லும் சாலையில் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான மரக்கடை உள்ளது. இங்கு வீட்டிற்கு தேவையான நிலை ,ஜன்னல் மற்றும் கட்டில்கள் பர்னிச்சர்கள் செய்யப்பட்டு வந்தது. இதற்காக ஏராளமான மரப்பலகைகள் ,கட்டைகள் ஆகியவை அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன .
இந்நிலையில் இன்று காலை 3:30 மணி அளவில் கடையிலிருந்து லேசாக புகை வருவதை அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் பார்த்தனர். இதையடுத்து அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் மளமளவென பற்றி எரிந்த தீயை அணைக்க தொடங்கினர். அதற்குள் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான மரச்சாமான்கள் மற்றும் மர கட்டைகள் ஆகியவை எரிந்து நாசமானதுு.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினரும் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.