கோவையில் ஆன்லைன் முலம் அழகிகளை புக்கிங் செய்து விபசாரம்நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் போலீசார் தீவிர சோதனைநடத்தினார்கள்.
அப்போது பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் ஆன்லைன் மூலம்புக்கிங் செய்து விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக வேலூரை சேர்ந்த திலிப் சேகர் என்ற திலிப் ( 26) கைது செய்யப்பட்டார். 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதேபோல போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆன்லைனில் விபசார அழைப்பு விடுத்ததாக சென்னையை சேர்ந்த சக்திவேல் (22 ) கோவைப்புதூர் மகேஸ்வரன் (53) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தேனியை சேர்ந்த ஒரு பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.














