விழுப்புரம் பூந்தோட்டம் அரசு நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 18 வயது முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மை துறை நல அமைச்சர் கே.எஸ் மஸ்தான் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அமைச்சர் பொன்முடி சான்றிதழ் வழங்கினார். பின்னர்
செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘விழுப்புரம் மாவட்டத்தில்தற்போது 22 ஆயிரத்து 400 கோவிஷீல்ட் ,கோவாக்சின் 4000 ஊசி என மொத்தம் 26 ஆயிரத்து 400 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளது எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’என்றார்.
விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.














