சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபா லனின் பாலியல் அத்துமீறல் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர் நடிகர் விஷா லும் ஒரு கண்டன ட்விட்டர் பதிவு போட்டுள்ளார்
அதில்,’ பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னை குறுகச் செய்கிறது ‘ என்றும், ‘ மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும் ‘என்றும் கருத்து தெரிவித்திருந்தார் .
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அப்பள்ளியின் நிர்வாகியின் உறவினரான நடிகை காயத்ரி ரகுராம் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
சினிமா துறையில் இருக்கும் விஷால் அவர்களே, முதலில் அந்தத் துறையில் உள்ள பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களை கண்டியுங்கள் .புதிதாக சினிமா வாய்’ப்பு தேடி வரும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்.முன்னணி நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கவனியுங்கள் .நீங்களும் உங்கள் நண்பர்களும் இதுபோல் எத்தனை பெண்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து இருப்பீர்கள் ?
உங்களைப் போன்றவர்களால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் .சினிமா துறையில் பாலியல் புகார்களை கூறும் பெண்கள் உங்கள் உதவியை நாடும் போது உங்கள் ஹீரோயிசத்தை அங்கே காட்டுங்கள் .உண்மையைச் சொல்லப் போனால் உங்களுடைய தொடர் அணுகுமுறையால் உங்களிடம் இருந்து முன்னணி நடிகைகள் ஓட்டம் பிடிக்கிறார்கள். அதை தெரிந்து கொள்ளுங்கள் ‘என்று மிகவும் காரமாக டுவிட் செய்துள்ளார்.