தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக நெல்லை செல்லும் மெயின் ரோட்டில் மயானக்கூடம் அமைந்துள்ளது. இங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லை, மின் மயானம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சட்டமன்ற உறுப்பினர் ராஜா திடீரென மயானம் அமைந்துள்ள ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவரிடம், ‘ தண்ணீர் தொட்டி கட்டித்தர வேண்டும். அதிக சடலங்கள் வருகின்றன. 3க்கு மேற்பட்ட பிரேதங்கள் வந்தால் எரிப்பதற்கு கஷ்டமான சூழ்நிலை உள்ளது., எனவே, மின் மயானம் தேவைப்படுகிறது’ என மயான ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சட்டமன்ற உறுப்பினர் ராஜா உறுதியளித்தார்.













