நடிகர் தனுஷ் – ரஜினி மகள் விவாகரத்து முடிவு

0
971


தொடர்ந்து பெண் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் தனுஷ் சுருதிஹாசன் உடன் கிசு கிசுக்கப்பட்டு ரஜினிகாந்த் குடும்பத்தில் பெரும் சர்ச்சையாகி பின் சமரசமானது பழைய கதை.
நடிகை அமலாபால், தொகுப்பாளினி டிடி ஆகியோர் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது,

இதில் நடிகை அமலாபால் விவாகரத்துக்கு பின் தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசு கிசுக்கபட்டார் தனுஷ், மேலும் இரவு பார்ட்டிகளில் அவர் நடிகைகளுடன் பங்கு பெற்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.


இந்நிலையில் தனுஷ் விவகாரம் முடிவே இல்லாமல் தொடர்ந்து சர்ச்சையாகி வந்த நிலையில், பலமுறை தனுஷ் மனைவி எச்சரித்தும், மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கி வந்துள்ள நடிகர் தனுஷ் ,ஐஸ்வர்யா விவகாரம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது..


தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தனுஷ் தொடர்ந்து அவர் நடித்த மூன்று படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் பட்டியலில் இடம் பெற்று, நடிகர் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்,

தொடக்கத்தில் எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்து வந்தார்.இவர் நடித்து வெளியான ஆடுகளம் படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது, இந்த படத்துக்கு தனுஷ் தேசிய விருது பெற்றார். இதற்கு பின்பு அடுத்த கட்டத்துக்கு போன நடிகர் தனுஷ் அவர் நடிக்கும் திரைப்படத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்துக்கு வந்தார்,

இதனை தொடர்ந்து சில படங்கள் நடித்த தனுஷ் அவருடைய மனைவி இயக்கத்தில் 3 படத்தில் நடித்த போது சுருதிஹாசன் உடன் கிசு கிசுக்கப்பட்டு ரஜினிகாந்த் குடும்பத்தில் பெரும் சர்ச்சையாகி பின் சமரசமானதாக பரபரப்பாக பேசப்பட்டது.


இதன் பின்பு தொடர்ந்து நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கி வந்த தனுஷ், நான் அபப்டியெல்லாம் இல்லை, இனிமேல் இதுமாதிரி பிரச்சனை வராது என சமாதனம் செய்து விட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி வந்துள்ளார், இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் தற்போதைய விவாகரத்து முடிவு வந்துள்ளது.


இது குறித்து தனுஷ் வெளியிட்ட அறிவிப்பில், ‛18 ஆண்டுகளாக நண்பர்களால், துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.
தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவும் விவாகரத்தை உறுதி செய்து அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மூத்த மகள் சவுந்தர்யா வழியில் இளைய மகள் ஐஸ்வர்யா வாழ்க்கை நகர்கிறது.சவுந்தர்யாவும் விவாகரத்து செய்து மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here