செல்லூர் ராஜு கேட்டார் நான் செய்தேன்: அமைச்சர் மூர்த்தி

0
902

தனது மேற்கு தொகுதியில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டதன் பேரில் மேற்கு தொகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் பி.மூர்த்தி மதுரையில் பேட்டி.

மதுரை கோச்சடை பகுதியில் அமைந்துள்ள பென்னர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது

தடுப்பூசி செலுத்தும் முகாமினை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.

ஆய்வு முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் மூர்த்தி,

‘மதுரை மாவட்டத்தில் கொரோனோ தாக்கம் குறைய துவங்கி உள்ளது

தனது மேற்கு தொகுதியில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டதன் பேரில் மேற்கு தொகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது

தடுப்பூசி முகாம்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

மதுரை மாவட்டத்தில் கிராமங்களில் கொரோனோ பரவல் ஆரம்ப நிலையில் உள்ளது

அதனை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கிராமப்புறங்களில் மேற்கொண்டு வரும் காய்ச்சல் கண்டறியும் பணிகள் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் பலனை தருகிறது’என்றார்.

அமைச்சர் பேட்டி காணொளி இதோ:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here