ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஹோட்டல் ரெசிடன்சி கட்டடத்தில் இயங்கி வந்த ஜி 1 ஈழு பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை குருசாமி, முருகன், சுசிலா, லிங்குசாமி, ஆகியோர் நடத்திவந்தனர். இவர்கள் பத்திரிகை மற்றும் ஊடகம் வாயிலாக விளம்பரம் செய்து, முதலீட்டாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி 37 முதலீட்டாளர்களிடம் ஒரு கோடியே 2 லட்சத்து 7 ஆயிரத்து 500 ரூபாயை ஏமாற்றி பெற்று தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்ட கோவை லிங்கம்பட்டி தெருவை சேர்ந்த குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் சௌந்தரராஜன் வழக்கு பதிவு செய்து, கோவை கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த டான் பிட் நீதிபதி ரவி இன்று லிங்குசாமி, குருசாமி, முருகன் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மூவருக்கும் சேர்த்து 72 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதில் லிங்குசாமி இறந்துவிட்டார். குருசாமி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












