முதல்வர் வீட்டு முன்பு தீக்குளித்து இறந்தவரின் உடல் கோவில்பட்டி அருகே அடக்கம்

0
1022

கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர் குளத்தைச் சேர்ந்த வெற்றிமாறன், இவருடைய மனைவி சபரி அம்மாள், இருவரும் ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடந்த 22ஆம் தேதி வேட்புமனு விண்ணப்பித்தனர், படிவத்தில் காலாவதியான வீட்டு தீர்வு ரசிது பயன்படுத்தியதால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த வெற்றிமாறன் சென்னையில் முதலமைச்சர் வீட்டு முன்பு தீக்குளித்தார், பின்பு அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் அவருடைய உடல் சென்னையில் இருந்து இன்று காலை கொண்டுவரப்பட்டு சொந்த ஊரான ஜமீன் தேவர்குளத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here