அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்படுகிறது.
அண்டை நாடான எரித்ரியாவுடன் எல்லை பிரச்னையை தீர்த்ததற்காகவும், சர்வதேச ஒத்துழைப்புக்காகவும் அவருக்கு விருது வழங்கப்படுகிறது.
ஒரோமோ மக்கள் ஜனநாயக அமைப்பின் தலைவர். 43 வயதாகும் அபி, ஆகரோ நகரில் கிறிஸ்துவ- முஸ்லிம் கலப்புக் குடும்பத்தில் பிறந்தவர். ராணுவத்தில் பணியாற்றியவர். தகவல் வலைப்பின்னல் மற்றும் பாதுகாப்பு முகமையினை உருவாக்கியவர். அறிவியல் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்தாண்டு அவர் பதவியேற்ற நிகழ்ச்சியின்போது நடந்த பேரணியில் கையெறி குண்டு வெடித்தது. பலர் கொல்லப்பட்டனர்.
பதவியேற்றது முதல் அரசின் அதுவரையான இரும்புப் பிடியைத் தளர்த்தி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். தடை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இணைய தளங்களையும், தொலைக்காட்சி சேனல்கள்களையும் மீண்டும் இயங்க அனுமதித்தார்.
அவரது முயற்சியால் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ‘ஜின்பாட் 7’ என்ற இயக்கம் அறிவித்தது.
தான் பிறந்த ஒரோமோ இனக்குழுவிலும், பிற இனக்குழுக்களிலும் உள்ள இளைஞர்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.














