முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.
ஈபிஎஸ் ஒபிஎஸ் இரட்டைக்குழல் துப்பாக்கி. எங்களுக்குள் எதுவும் இல்லை. கட்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் தான் மரண எண்ணிக்கை கூடியுள்ளது. எங்கள் ஆட்சி காலத்தில் நோயாளிகளே இல்லையே.
அதிமுக ஆட்சியில் நோயாளிகள் இல்லையென்பதால் ஆக்ஸிஜன் தேவை இல்லாமல் இருந்தது.
மதுரைக்கு கொரானா தடுப்பூசி குறைவாக வந்துள்ளதாக மதுரை ஆட்சியர் தெரிவித்திருந்தார். அதிகளவு ஊசிகளை கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கூடங்கள் பல திறக்காமல் உள்ள நிலையில் அங்கு கொரானா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை கொரானா தொற்று குறைந்துள்ளது.. ஊரடங்கு ஒரளவு கைகொடுத்துள்ளது.
பணப்புழக்கம் இல்லை. மக்கள் கஷ்டப்படுகிறார்கள். கூடுதலாக 5000ரூபாய் கொடுக்க முதல்வர் முன்வர வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளுக்கு மிரட்டல் உருட்டல் உள்ளது என எல்லோருக்கு தெரியும். எங்கள் ஆட்சியில் அதிகாரியிடம் நாங்கள் எந்தப்பிரச்சனைக்காகவும் நேரிலோ தனிப்பட்ட முறையிலோ பேச மாட்டோம்.
ஆனால் திமுக பிரமுகர் தலையீட்டால் ஜெய்ஹிந்த்புரம் ஆய்வாளர் மாற்றப்பட்டுள்ளார். இது ரவுடிசம் தலைதூக்குவதற்கான ஆரம்பம். திமுக ஆட்சிக்கு தேனிலவே முடியவில்லை முடியவில்லை அதற்குள் ரவுடிசம் தலைதூக்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டி காணொளி கீழே:














