சாத்தான்குளம் தந்தை மகன் கொட்டடிக் கொலை வழக்கின் விசாரணை மதுரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது, இந்த விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி, சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
நீதிபதிகள் பிஆர் கவாய், கிருஷ்ணா முராரிமுன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த மனுவின் விசாரணைக்கு பின்பு, மதுரை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.