மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சம் லாரிகள் வேலைநிறுத்தப்பட்டன.
போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்தது.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் 4,800 லாரிகள் ஓடவில்லை. தென்காசி அருகே உள்ள செங்கோட்டையில் தமிழக-கேரள எல்லையில் 200 லாரிகள் நிறுததப்பட்டுள்ளன.
இதனால் கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.







