மிகப்பெரிய ஆரவாரத்துடன் திரையரங்குகளை ஆக்கிரமித்த GOAT திரைப்படம், விஜயின் அரசியல் நுழைவாயிலில் தோரணமாக தொங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பரபரப்பாக ரசிகர்கள் அரங்குகளை நிறைத்தார்கள். மிகப்பெரிய வசூலை அள்ளிக் குவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ரிலீசான அன்று மாலையிலேயே ‘ஆன்லைன் காப்பி’யாக படம் வெளியாகிவிட்டது.
முழுப் படமும் telegram செயலியில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.