கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எல்லைகிராமத்தில் எலவனாசூர்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக வந்த தமிழ்நாடு அரசு இணை உணவு வினியோகம் உத்தரவு பெற்ற துண்டறிக்கை ஒட்டப்பட்ட வாகனத்தை மறித்து விசாரணை செய்தபோது, ஓட்டுனர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில் கர்நாடக மாநிலத்தில் இருந்து நத்தாமூருக்கு விற்பனை செய்வதற்காக
மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது
இதனை அடுத்து வாகனத்தில் வந்த நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன், சக்திவேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 672 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
முழு ஊரடங்கு சூழலுக்கு ஏற்ப சிந்தித்து உணவுுுுு விநியோகம் என்ற ஸ்டிக்கர்் ஒட்டி ப புத்திசாலித்தனமாக மதுுு கடத்தியவர்கள் இப்போதுுுுு கம்பி எண்ணுகிறார் கள்.















