சேதமடைந்த கூட்டப்பனை மீன்வலைக் கூடம்: திட்டமிட்டும் செயல்படுத்தாத சோகம்

0
501

உவரி அருகே உள்ள கூட்டப்பனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்கள்.. இங்குள்ள மீன்பிடி வலைக்கூடம் கடந்த பல ஆண்டுகளாக மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து உள் அமர்ந்து பணி செய்ய முடியாத நிலையில் உள்ளது.

இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் முறையிட்டும் பலன் இல்லை. இறுதியாக, ரூ. 9.5 லட்சம் மதிப்பீட்டில் இதற்காக திட்டம் தீட்டப்படுகிறது. விரைவில் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தும் சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

இதனால், வானமே கூரையாக, மழைக்கும் வெயிலுக்கும் வெட்ட வெளியில் இருந்தே வலை சீரமைப்பு உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டியுள்ளது என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இனியாவது விரைந்து செயல்பட்டு மேற்கூரையை சீரமைத்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here