தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக நா.புகழேந்தி போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
குமரி அனந்தன், ஊர்வசி அமிர்தராஜ் உட்பட பலர் இடம் கேட்டனர். ஆனால், சென்னையில் கட்டுமான பணி நிறுவனம் நடத்தும், குமரி மாவட்டத்துக்காரரும், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ரூபு மனோகரனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.









