கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் நிரஞ்சலாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்திய அஞ்சல் துறை மற்றும் யுனிசெப் சார்பில் “குழந்தைகள் உரிமை” என்ற கருப்பொருளில் அஞ்சல் தலை வடிவமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயிர் வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை, வளர்ச்சிக்கான உரிமை மற்றும் பங்கு பெறும் உரிமை ஆகியவை போட்டியின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி, வரும் செப். 7 முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.50ஆயிரம், 2ஆம் பரிசு ரூ.25 ஆயிரம், 3ஆம் பரிசு ரூ.10ஆயிரம், ஆறுதல் பரிசாக 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்வோர் தங்களது அஞ்சல் தலை வடிவமைப்பின் அச்சு நகல்களை Asst. Director General (Philately), Room No.108, Dak Bhawan, Sansad Marg, New Delhi – 110 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.