தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 16) மழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் 18.30 மில்லி மீட்டர், கோவில்பட்டி 13.30 மில்லி மீட்டர், விளாத்திகுளம் 20 மில்லி மீட்டர், ஓட்டப்பிடாரம் 30 மில்லி மீட்டர் என பதிவாகி இருந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 94.80 மில்லி மீட்டர் கன மழை பதிவாகியுள்ளது.









