நீட் தேர்வு ஆள்மாற்றட்டம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆள் மாறாட்டம் நடந்து இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. மருத்துவ துறை அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை தான் பதில் அளிக்க வேண்டும். நீட் தேர்வை தமிழக அரசு நடத்தவில்லை. மத்திய அரசு தான் நடத்தியது. எனவே இதற்கு தமிழக அரசு காரணம் அல்ல. இருந்தாலும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.