அஞ்சல் அதிகாரி வீட்டில் இருமுறை திருடி மூன்றாம் முறை தோல்வியடைந்த திருடன் தப்பி ஓட்டம்

0
1091

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வடக்கு மாடவீதி தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அஞ்சல் அதிகாரியான ஆனந்தகிருஷ்ணன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த 9ஆம் தேதி மதியம் அவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டின் சமையலறையில் சார்ஜரில் இணைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் திருடு போனது . இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துவிட்டு செல்போன் தொலைந்ததால் தனக்கு கிரகம் கழிந்துவிட்டது எனக்கூறி விஷயத்தை அப்படியே விட்டுவிட்டார்.

இந்நிலையில் நேற்று மதியம் 3.30 மணி அளவில் அவர் வீட்டு சமையலறையில் செல்லை சார்ஜ் போட்டு விட்டு குடும்பத்தினர் அனைவரும் தூங்கியுள்ளனர். அப்போது அந்த 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்லும் மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தகிருஷ்ணன் உடனடியாக சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இன்று காலை 11 மணி அளவில் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் முன் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவரது வீட்டில் சமையல் அறை ஜன்னலில் இருந்த பாத்திரங்கள் கீழே விழும் சத்தம் கேட்டது.

ஆனந்த கிருஷ்ணன் குடும்பத்தினர் பின் வாசலில் சென்று பார்த்த போது மர்ம நபர் ஒருவர் திருட வந்து, வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஏமாற்றமடைந்து ஓடியது தெரிய வந்தது.

உடனடியாக ஆனந்தகிருஷ்ணன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் முத்துமாரி தலைமையிலான போலீசார் ஆனந்தகிருஷ்ணனின் வீட்டின் பின்பகுதி மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டின் மாடியில் சென்று திருடனை தேடினர். அதற்குள் திருடன் தப்பித்து விட்டான்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ஆனந்தகிருஷ்ணனின் குடும்பத்தினரைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவர் தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்க கூடும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here